Wednesday 16 August 2017


  (கா) ( டு ) வுள்

சிந்தனைகள் தாபரங்களில் தூங்க மறுத்து
மூளையின் இயக்கப்புறணியை புரட்டுகின்றன
முன் எப்போதோ கனவில் கண்டது
பின் எப்போதோ பகலில் காணக்கிடைக்கும்   
வானம் என்றேனும் வடிவம் வேண்டி அலறும்
பூமி அந்நாளில் புலம்பும்
அதுவரை
நீரின் தாயை நித்திரையடையாமல்
இருக்கும்படி சொல்கிறேன்
மனிதனின் திருவெலும்பு 
திடங்கொண்டு இருக்கையில்
தாற்றுக்கோலை தேடுமோ
தேடினால் புரியும்
ஆழத்தின் முகம் பனிக்கல்
காதலின் முகம் மாயக்கல்
பிடரி மடலில் அது மறைந்தே இருக்கட்டும்
நம்பிக்கைகளை மூடன்
கருமைமிக்க காந்தமாக்குகிறான்
ஞானியின் இதயம் இதனருகே
புன்னகையுடன் விலகும்
ஞானிக்கு அறிவின் உணவு
சிங்கத்தின் நகத்திலும் கிடைக்கும்
ஆனால் ஒருபோதும்
காட்டிற்கான உணவை கடலால் தர இயலாது
காடு சுயம்பு
நீரினை படைத்துக் கொண்டே இருக்கும் கடவுள்


- தேன்மொழி தாஸ்  

25.2.2016
1.14 am

                  




மரத்தின் நெஞ்சு
•••••••••••••••••••••••
ஒரு வெட்டுக்கிளியை
என்னால் மிரட்டமுடியாது விரட்டவும்
இலைநரம்புகளில் இயலாமை துடிக்கிறது
காட்டுக்குருவிகளின் கடினமனம் அதன் கருவறையடியில் இருப்பதை
குஞ்சுகள் பாடுகின்றன
அவை மீண்டும் இசைக்கின்றன புதிய முட்டைகள்நெய்க்காளான் புற்று
நெய்க்காளான் புற்றுராஜாளியின் கற்பனை
காட்டின் உச்சியில்
இறைச்சிகளை இழுத்து வருகிறது
அதன் மோப்ப சக்தியை
கண்களுக்குள் கடத்தும் ஆரவாரத்தில் தான்
மலைகளை அளக்கிறது 
ரத்தத்தின் சத்தம் சருகுகளுக்கு அடியில் இருப்பதை
சர்வ சுதந்திரம் இருளின் இடையே கடப்பதைநானும் அறிவேன்
நான் தேவதை அல்ல
எனது பாதங்கள் பள்ளத்தாக்கினடியிலும்
மனம் நிகர் அற்ற வெளியாகவும் இருக்கையில்
நிகீயெனக் கனைக்கவும் நதியெனப் பாயவும் முடியுமா 
மலைகளின் ஊடாக மேய்ச்சலுக்குச்செல்லும் கேளையாடுகளின்
கவலைகளை
இச்சலப்பூக்கள் அறியும்
இடையன் அறியான்நான் துயரடைகிறேன்எனது முகத்தின் கதவு
கூரிய விழிகளுக்குப் பின்னிருக்கும்
குளிர் காலமேமொட்டு தும்மும் போது
பிறக்கும் ஒளி தான்
மலர்தல்கல்த்திரி மரத்தின் நெஞ்சு
கணீர் கணீரென கதறும் போது
கோடாலியின் ஊடே கடந்து மலைகளை அறைவது
காலங்களின் அடித்தொண்டை தான்
-தேன்மொழி தாஸ்
          19.12.2016 


            02.14am




           

மூடுபனியின் நீர்ச்சால்கள்

காற்றின் வரையறைகளை கண்டுணரும் மலைவாசிக்கு யானைகளின் லத்திகள் காட்டு வழிகளின் இரகசியங்கள் யாருமற்ற போது அடி வயிற்றிலிருந்து எ...